/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'ஸ்விக்கி' ஊழியரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது
/
'ஸ்விக்கி' ஊழியரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது
ADDED : ஆக 29, 2025 12:41 AM
திருவள்ளூர் :திருவள்ளூர் பகுதியில் 'ஸ்விக்கி' ஊழியரை தாக்கி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த புங்கத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார், 29; 'ஸ்விக்கி' டெலிவரி பணி செய்து வருகிறார். இவர், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் காக்களூர் அருகே 'ஹீரோ ஸ்பிளன்டர்' பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த போதை நபர்கள், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, 'ஜிபே' மூலம் 400 ரூபாய் அனுப்பியுள்ளார். மேலும் பணம் கேட்ட மர்ம நபர்கள், தரமறுத்ததால் கல்லால் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த சரத்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது சகோதரர் சக்திவேல் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா விசாரித்து வந்தனர்.
விசாரணையில், காக்களூர் ஷியாம், 22 மற்றும் ஈக்காடு சந்தோஷ், 23, ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.