ADDED : நவ 17, 2024 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில், டாஸ்மாக் கடை இயங்காத காலை நேரத்தில், ‛பிளாக்'ல் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று, கவரைப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, கீழ்மேனி கிராமத்தில் வீட்டின் அருகே, மது விற்பனை செய்த சீமாதேவி, 38, என்பவரை கைது செய்தனர். ஏ.என்.குப்பம் கிராமத்தில், மது விற்பனை செய்த நித்தேஷ், 28, என்பவரை கைது செய்தனர். இருவரிடமும், 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.