தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/டூ - வீலர்கள் மோதல்: இருவர் படுகாயம்

டூ - வீலர்கள் மோதல்: இருவர் படுகாயம்

டூ - வீலர்கள் மோதல்: இருவர் படுகாயம்


UPDATED : அக் 28, 2026 08:07 PM

ADDED : அக் 28, 2026 04:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 08:07 PM ADDED : அக் 28, 2026 04:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், இருவர் படுகாயம் அடைந்தனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த தேவலாம்பாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு, 47. இவர், இன்று (அக்.,28) புதுார்மேடு சோதனைச்சாவடியில் இருந்து, தேவலாம்பாபுரத்திற்கு, 'ஹீரோ ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தேவலாம்பாபுரத்தில் இருந்து புதுார்மேடு நோக்கி வந்து கொண்டிருந்த, 'யமஹா ஆர்15' இருசக்கர வாகனம், இவர் மீது மோதியது. இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்தோர், அவர்கள் இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆர்.கே.பேட்டை போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 'யமஹா ஆர்15' இருசக்கர வாகனத்தில் வந்தது, தேவலாம்பாபுரம் காலனியை சேர்ந்த அபிஷேக், 24, என, தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us