/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீன் பிடிப்பதில் பிரச்னை இரு தரப்பினர் மோதல்
/
மீன் பிடிப்பதில் பிரச்னை இரு தரப்பினர் மோதல்
ADDED : மே 12, 2025 11:32 PM
பழவேற்காடு, பழவேற்காடு மீனவ பகுதியில், ஏரியில் மீன்பிடி தொழில் செய்யும்போது, அவர்களுக்குள் 'பாடு' என்கிற எல்லை பகுதிகளை பிரித்து தொழில் செய்கின்றனர். அவ்வப்போது மீனவ கிராமங்களுக்குள் பிரச்னை மற்றும் மோதல் ஏற்படுவதும், அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது.
நடுவூர்மாதகுப்பத்தை சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்குள், 'பாடு' பிரச்னை இருந்து வருகிறது. நேற்று, மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த இருதரப்பினர், மீன்பிடி தொழில் செய்யும் போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
மீன்பிடி வலைகளை கட்டுவதற்கு பயன்படும் கம்புகளை வைத்து தாக்கி கொண்டதில், இருதரப்பை சேர்ந்த மகிமை, 54, ஜோஷ்வா, 63, அந்தோணி, 55, பெரியநாயகம், 32, மற்றும் மகிமை, 40, ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக, திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.