/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலி தங்க கட்டி விற்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது
/
போலி தங்க கட்டி விற்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது
போலி தங்க கட்டி விற்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது
போலி தங்க கட்டி விற்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது
ADDED : ஏப் 28, 2025 11:34 PM

திருவள்ளூர்
28.04.25/கடம்பத்துார் /தி.நடராஜசிவா/ 7904308590/ கீ:1753 / 12:30
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா மேல்நல்லாத்துாரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு வந்த கடந்த மார்ச் 20ம் தேதி இருசக்கர வாகனத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார், 23 ஜெயரங்குல லட்சுமி, 29 இருவர் வந்தனர். ஜெயரங்குல லட்சுமி முகத்திற்கு பேஷியல் செய்தார்.
தொடர்ந்து, 'சரண்யாவிடம் எங்களிடம் 430 கிராம் எடை கொண்ட தங்க கட்டி உள்ளது. 10 லட்சம் ரூபாய் தந்தால் தங்க கட்டி தருகிறோம்' என தெரிவித்துள்ளனர். சரண்யா தன் உறவினர் முகம்மது இர்பானிடம் கூறி விட்டு, நாளை வாருங்கள் என, கூறியுள்ளார்.
மறுநாள் இருவரும் பியூட்டி பார்லருக்கு வந்து அவர்களிடம் தங்க கட்டிகளை கொடுத்து, 'சோதனை செய்து பார்த்து விட்டு பணம் தாருங்கள்' என, கூறினர்.
இதையடுத்து அருகில் உள்ள அடகு கடையில் சோதனை செய்தபோது, ஒரிஜினல் என, கூறியதையடுத்து பணம் ரெடி செய்து விட்டு, வாங்குவதாக கூறியுள்ளனர்.
நேற்று முன்தினம் மீண்டும் கடைக்கு வந்த இருவரும் தங்க கட்டியை கொடுத்து பணம் கேட்டனர். அப்போது அவர்களை கடையில் உட்கார சொல்லி விட்டு அடகு கடைக்கு சென்று மீண்டும் தங்கத்தை சோதனை செய்த போது அது போலி என தெரிந்தது.
முகம்மது இர்பான் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போலி தங்க கட்டி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.