/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீடியனில் மோதி விபத்து சிறுவன் உட்பட இருவர் பலி
/
மீடியனில் மோதி விபத்து சிறுவன் உட்பட இருவர் பலி
ADDED : மார் 20, 2025 02:14 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த வெங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் மகன் சபரிநாதன், 18. இவர், நேற்று மாலை தாமரைபாக்கத்தில் இருந்து வெங்கல் நோக்கி, 'ஹீரோ ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். உடன், ஆவாஜிபேட்டையைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஜெகதீஷ், 16, சென்றார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜெகதீஷ், சபரிநாதனுடன் லிப்ட் கேட்டு வந்துள்ளார். அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்ததாக கூறப்படுகிறது. தாமரைப்பாக்கம் அருகே வந்த போது, சாலை திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மீடியன் மீது மோதியது.
இதில், நிலைகுலைந்து எதிரே வந்த லாரியின் குறுக்கே விழுந்தனர். லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த வெங்கல் போலீசார், இருவரின் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.