/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வங்கி முன் நிறுத்தியிருந்த டூ-வீலர் திருட்டு
/
வங்கி முன் நிறுத்தியிருந்த டூ-வீலர் திருட்டு
ADDED : நவ 24, 2024 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்அடுத்த கீழாந்துார்கிராமத்தைச் சேர்ந்தவர் இன்ப நாதன் மகன்பிரசாந்த்,28.
இவர் நேற்று முன்தினம் மதியம், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து திருத்தணிம.பொ.சி. சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு வந்தார்.
வங்கி முன் பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று பணம் கட்டி விட்டு திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிந்தது.
பிரசாத் கொடுத்தபுகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் இரு சக்கரவாகனத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.