/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத என்.என்.கண்டிகை சுடுகாடு
/
பராமரிப்பு இல்லாத என்.என்.கண்டிகை சுடுகாடு
ADDED : டிச 23, 2024 11:57 PM

திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், என்.என்.கண்டிகை கிராமத்தில், 750க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியினர் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம், கிராமத்தின் கிழக்கு புறத்தில், நான்கு ஏக்கர் பரப்பில் சுடுகாட்டில், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும், எரிப்பதற்கும் வசதி ஏற்படுத்தியுள்ளன. மேலும், சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர், ஆழ்துளை கிணறு, எரிமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுடுகாட்டை முறையாக ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், தற்போது செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் எரிமேடை சுற்றியும் செடிகள், கொடிகள் வளர்ந்து உள்ளதால், இறந்தவர்களின் இறுதி சடங்கு செய்வதற்கு அப்பகுதியினர் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், சுடுகாட்டை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.