/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரமைக்கப்படாத பள்ளி நுழைவாயில் கதவு
/
சீரமைக்கப்படாத பள்ளி நுழைவாயில் கதவு
ADDED : டிச 15, 2024 12:33 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, சி.ஜி.என்.கண்டிகையில், 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி, சி.ஜி.என்.கண்டிகை காலனி மற்றும் யு.ஆர்.ஆர்.கண்டிகை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள குழந்தைகள், சி.ஜி.என்.கண்டிகை அரசு நடுநிலைப் பள்ளியில், 1 - 8ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பாழடைந்து கிடந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சில ஆண்டுகளுக்கு முன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றப்பட்டது.
இந்த பணியின் போது, நுழைவாயின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது. இதனால், வாயிற்கதவின் தெற்கு பகுதி நாசமானது. இதுவரை வாயில்கதவு சீரமைக்கப்படவில்லை. இதனால், பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இரவு நேரத்திலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் வெளிநபர்கள், பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்கின்றனர். பள்ளி வளாகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நுழைவாயில் மற்றும் வாயிற்கதவை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.