/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா
/
வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா
ADDED : ஆக 23, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கவரைப்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா நடந்தது.
கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், ராதா, ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 20வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உத்சவ நிகழ்ச்சிகள், கடந்த 17ம் தேதி துவங்கிய நிலையில், தொடர்ந்து10 நாட்கள் நடைபெறஉள்ளது.
முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள யாதவர் குடும்பத்தினர் சார்பில், உறியடி விழா நடந்தது. உறியடி கண்ணனாக உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என, ஏராளமானோர் உறியடித்து கொண்டாடினர்.