/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் இடையூறு ஊத்துக்கோட்டையில் தினம் தினம் அவதி

ADDED : ஏப் 28, 2025 11:36 PM

ஊத்துக்கோட்டை,போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில், நிறுத்தும் வாகனங்களால், நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஊத்துக்கோட்டை பஜார் வழியே, தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
இங்குள்ள பேருந்து நிலையத்தில், பேருந்து சென்று பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை. சாலையில் நிறுத்தி விடுவதால் பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அரசு மற்றும் பேருந்துகளுக்கு போட்டியாக, ஆட்டோக்களும் நிறுத்துவதால், அடிக்கடி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுகிறது. அவசர மருத்துவ உதவிக்கு செல்லும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கி விடுகிறது.
டி.எஸ்.பி., தாசில்தார் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பகுதியில் சாலையில் நிறுத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.