/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குமாரகுப்பத்தில் 26ல் உற்சவர் முருகன் வீதியுலா
/
குமாரகுப்பத்தில் 26ல் உற்சவர் முருகன் வீதியுலா
ADDED : ஜன 20, 2025 11:52 PM
திருத்தணி, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முடிந்ததும் குமாரகுப்பம் கிராமத்தில் உற்சவர் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஊர்வலம், குமாரகுப்பம் சுமைதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் கொடுக்கும் வெகுமதியாகும்.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான உற்சவர் முருகன் வீதியுலா, இம்மாதம், 26ம் தேதி நடைபெறுகிறது. அன்று, காலை 10:00 மணிக்கு உற்சவர் முருகன் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக மேல்திருத்தணி நல்லாங்குளம் பகுதிக்கு சுமைதாரர்கள் கொண்டு வந்து, அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், குமாரகுப்பம் கிராமத்தில் அழைத்து செல்வர்.
பின், மாலை 6:00 மணிக்கு அங்குள்ள பெருமாள் கோவிலில் உற்சவருக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வீதிகளில் உலா வந்து, இரவு 10:00 மணிக்கு மீண்டும் மலைக்கோவிலுக்கு உற்சவர் சென்றடைவர். இதற்கான ஏற்பாடுகளை குமாரகுப்பம் பொதுமக்கள், சுமைதாரர்கள் செய்து வருகின்றனர்.