/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 29, 2025 09:29 PM
திருத்தணி:வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
திருத்தணி அடுத்த அகூர் நத்தம் பகுதியில் உள்ள டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளி வளாகத்தில் புதியதாக வலம்புரி விநாயகர் கோவில் உருவாக்கப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் ஒரு யாக சாலை, 18 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் வாஸ்து பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு மூலவர் விநாயகர் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதில் பள்ளி தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம், செயலர் ரவிக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட நத்தம், அகூர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.