தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்

இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்

இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்


UPDATED : நவ 05, 2026 11:51 PM

ADDED : நவ 04, 2026 06:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:51 PM ADDED : நவ 04, 2026 06:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வி.ஏ.ஓ., எனும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை, உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தில், அரசு தொடக்க பள்ளிக்கு செல்லும் வழியில், வி.ஏ.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது.

இதன் அருகே, அம்மன் கோவில், ரேஷன் கடை உள்ளிட்டவையும் உள்ளன. கிராமத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த அலுவலக கட்டடம், கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிப்பின்றி சீரழிந்த நிலையில் உள்ளது.

கட்டடத்தின் கான்கிரீட் கூரை மற்றும் துாண்கள் முற்றிலும் வலுவிழந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

இதனால், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ – மாணவியர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ரேஷன் கடைக்கு வரும் பகுதி மக்கள், அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியில் உள்ள இந்த கட்டடம், எந்நேரத்திலும் இடிந்து விழ நேரிடலாம் என, கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us