/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை
/
திருத்தணி கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை
ADDED : செப் 03, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் மலைப்பாதை சேதம் அடைந்ததால், நேற்று முன்தினம் முதல் தார்ச்சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கியது.
நேற்றுடன் சாலை பணிகள் முடிவடைந்து விடும் என எண்ணிய கோவில் நிர்வாகம், வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு இரண்டு நாட்கள் மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பணிகள் முழுமையாக முடியாததால் இன்றும் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு கோவில் நிர்வாகம் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. வழக்கம் போல் பக்தர்கள் வசதிக்காக கோவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுதவிர இன்று இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.