/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெள்ளோடை- ஆண்டார்குப்பம் சாலை சேதம்
/
வெள்ளோடை- ஆண்டார்குப்பம் சாலை சேதம்
ADDED : அக் 19, 2024 12:57 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வெள்ளோடை கிராமத்தில் இருந்து ஆண்டார்குப்பத்திற்கு செல்லும் சாலை சேதம் அடைந்தும், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
தற்போது பெய்த மழையால் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருக்ககிறது. விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் மழைநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இந்த சாலை வழியாக வெள்ளோடை, கிருஷ்ணாபுரம், ஆண்டார்குப்பம், பெரவள்ளூர், வைரவன்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் நிலையில், அவர்கள் சிரமமான பயணம் மேற்கொள்கின்றனர்.
தனியார் பள்ளிகளின் வேன்கள், விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களும் பள்ளங்களில் சிக்கி சிரமத்திற்கு உள்ளாகின்றன.
மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் மேற்கண்ட சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.