/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அச்சத்தில் வேளூர் கிராம மக்கள்
/
மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அச்சத்தில் வேளூர் கிராம மக்கள்
மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அச்சத்தில் வேளூர் கிராம மக்கள்
மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அச்சத்தில் வேளூர் கிராம மக்கள்
ADDED : நவ 24, 2025 04:13 AM

பொன்னேரி: மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், வேளூர் கிராம மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றியம் வேளூர் கிராமத்தில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மேலும், கான்கிரீட் கட்டுமானங்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், சேதமடைந்த தொட்டியை சுத்தம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், கிராம மக்கள் சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.