/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் அகற்றாததை கண்டித்து வேப்பம்பட்டு மக்கள் மறியல்
/
மழைநீர் அகற்றாததை கண்டித்து வேப்பம்பட்டு மக்கள் மறியல்
மழைநீர் அகற்றாததை கண்டித்து வேப்பம்பட்டு மக்கள் மறியல்
மழைநீர் அகற்றாததை கண்டித்து வேப்பம்பட்டு மக்கள் மறியல்
ADDED : அக் 25, 2025 02:35 AM

வேப்பம்பட்டு: வேப்பம்பட்டு குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த 26 வேப்பம்பட்டு ஊராட்சியில் ராமகிருஷ்ணா நகர், ரயில் நகர், முருகன் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, இங்குள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.
கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திற்கு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நேற்று காலை கலெக்டர் பிரதாப், அப்பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வருவதாக தகவல் பரவியது.இதையடுத்து, அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:00 மணி முதலே காத்திருந்தனர். ஆனால், 12:00 மணியளவில் அவ்வழியாக காரில் சென்ற கலெக்டர், அப்பகுதி மக்களை சந்திக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பகுதிமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செவ்வாப்பேட்டை போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பின், மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் பிரதாப், வேப்பம்பட்டு ஊராட்சி ராமகிருஷ்ணா நகர் பகுதியில் ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்றும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

