/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை மருந்தகங்கள் மாலை நேரத்தில் திறப்பதில்லை: சிகிச்சை அளிப்பதில் சிக்கல்
/
கால்நடை மருந்தகங்கள் மாலை நேரத்தில் திறப்பதில்லை: சிகிச்சை அளிப்பதில் சிக்கல்
கால்நடை மருந்தகங்கள் மாலை நேரத்தில் திறப்பதில்லை: சிகிச்சை அளிப்பதில் சிக்கல்
கால்நடை மருந்தகங்கள் மாலை நேரத்தில் திறப்பதில்லை: சிகிச்சை அளிப்பதில் சிக்கல்
ADDED : அக் 21, 2024 02:00 AM
திருவள்ளூர் மாவட்டத்தில், 5 கால்நடை மருத்துவமனைகள், 89 கால்நடை மருந்தகங்கள், 26 கால்நடை கிளை நிலையங்கள், நான்கு நடமாடும் வாகனங்கள் மூலம் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறிப்பாக பசு மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல், ஆடு, கோழிகளுக்கு தடுப்பூசி போடுவது உள்பட பல்வேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காலை, 8:00--- 12:00 மணி, மாலை, 3:00-- - 5:00 மணி வரை கால்நடை மருந்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் திறந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மருந்தகம், கிளை நிலையங்கள் காலை நேரத்தில் மட்டுமே திறந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் திறக்காததால் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், கால்நடைகள் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மதியம், 12:00 மணி முடிந்ததும் அவர்கள் சொந்த வேலை மற்றும் வீடுகளுக்கு சென்று விடுகின்றனர். சில மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து, சிகிச்சை அளிக்கின்றனர்.
எனவே, கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் நலன்கருதி மாலை நேரத்திலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
இது குறித்து மாவட்ட கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,' மாலை நேரத்திலும் கண்டிப்பாக மருந்தகம், கிளை நிலையங்கள் திறந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தவறும் பட்சத்தில் உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
-நமது நிருபர்-