/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிரம்பி வழியும் வல்லுார் அணைக்கட்டு கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரம்
/
நிரம்பி வழியும் வல்லுார் அணைக்கட்டு கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரம்
நிரம்பி வழியும் வல்லுார் அணைக்கட்டு கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரம்
நிரம்பி வழியும் வல்லுார் அணைக்கட்டு கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : டிச 03, 2024 06:21 AM

மீஞ்சூர் : மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, வல்லுார் அணைக்கட்டு அமைந்து உள்ளது. அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுகிறது.
வடகிழக்கு பருவ மழை துவங்கிய நாள்முதல், கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.
கடந்த, மூன்று தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, பல்வேறு நீர்நிலைகளின் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
இதனால், வல்லுார் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு, 2,000 கனஅடி உபரிநீர் வெளியேறி சுப்பாரெட்டிப்பாளையம், நாப்பாளையம் வழியாக எண்ணுார் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
அணைக்கட்டு நிரம்பியதை தொடர்ந்து ஆற்றின் கரைகள் மற்றும் கரையோர கிராமங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அணைக்கட்டிற்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், வருவாய்த்துறையினரும் கரையோர கிராமங்களில் முகாமிட்டு உள்ளனர்.
அதே சமயம் அணைக்கட்டு பகுதியில் இளைஞர்கள் ஜாலியாக குளித்து விளையாடுவது, மீன்பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
அணைக்கட்டு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிகயில் ஈடுபடுவதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.