/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் புனரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
/
பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் புனரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் புனரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் புனரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : நவ 29, 2025 03:40 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நுாற்றாண்டு கடந்த சிவன் கோவில் மற்றும் விஷ்ணு கோவிலை புனரமைத்து, வழிபாடு நடத்த கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் கரிக்கலவாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நெடுஞ்சாலையில் இருந்து கரிக்கலவாக்கம் வயல்வெளி பகுதியில், சிவன் கோவில் உள்ளது.
பல நுாற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டதாக, அப்பகுதி மக்கள் கூறும் இக்கோவிலின் மூலவர் சாம்பசிவ மூர்த்தி என்றழைக்கப்படுகிறார். பார்வதி தேவி, சிவன் மடியில் அமர்ந்த நிலையில், அழகிய கற்சிலை இங்கு அமைந்துள்ளது.
மூலஸ்தானத்தில் லிங்கம் இருந்திருக்கலாம் எனவும், கோவில் சிதிலமடைந்து, பாழடைந்து இருப்பதால், அந்த சிலை மாயமாகி இருக்கலாம் எனவும், கிராம மக்கள் கூறுகின்றனர். கோவிலுக்குள், துர்கா சிலை பாதி உடைந்த நிலையில் உள்ளது.
மேலும், கோவிலுக்கு அருகே உள்ள குளம் துார்ந்து போய் உள்ளது. சிறப்பு வாய்ந்த சிவன் கோவில், பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. கோவில் சுவர் ஆங்காங்கே இடிந்து, செடிகள் வளர்ந்துள்ளன.
விஷ்ணுவாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள லட்சுமி நரசிம்மர் சிலை, ஆதரவற்ற நிலையில் காணப்படுகிறது. தாயார் லட்சுமி, நரசிம்மர் மடியில் அமர்ந்து சாந்தமாக காட்சியளிக்கிறார்.
இந்த சிலையும், முறையாக வழிபாடின்றி உள்ளது.எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், இரண்டு கோவில்கள் அமைந்துள்ள இடத்தில் அகழாய்வு செய்து, கோவிலின் பாரம்பரியத்தை வெளிக்கொணர வேண்டும்.
மேலும், கோவிலை கட்டி, முறையாக வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

