/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேல்ஸ், சத்யபாமா பல்கலைகள் 'பீச்' வாலிபால் போட்டியில் முதலிடம்
/
வேல்ஸ், சத்யபாமா பல்கலைகள் 'பீச்' வாலிபால் போட்டியில் முதலிடம்
வேல்ஸ், சத்யபாமா பல்கலைகள் 'பீச்' வாலிபால் போட்டியில் முதலிடம்
வேல்ஸ், சத்யபாமா பல்கலைகள் 'பீச்' வாலிபால் போட்டியில் முதலிடம்
ADDED : ஜன 19, 2025 02:46 AM

சென்னை, இந்திய பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பு, அமெட் பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்திய, அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான பீச் வாலிபால் போட்டி, கோவளத்தில் நேற்று மதியம் நிறைவடைந்தது.
போட்டியில், இருபாலரிலும் நாடு முழுதும் இருந்து, 68 பல்கலை அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், சத்யபாமா மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள் மோதின.
அதில், பலமான எஸ்.ஆர்.எம்., அணியை, 42 - 21 என்ற புள்ளி கணக்கில், சத்யபாமா பல்கலை வீழ்த்தி, முதலிடத்தை வென்றது.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், சென்னை பல்கலை அணி, 42 - 20 என்ற கணக்கில் கற்கபம் அகாடமியை தோற்கடித்தது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில், வேல்ஸ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பான ஆட்டத்தில், துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்து சமநிலையில் தொடர்ந்தன.
முடிவில், 52 - 50 என்ற இரு புள்ளிகள் வித்தியாசத்தில், வேல்ஸ் பல்கலை வெற்றி பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது.
மூன்றாம் இடத்தை, புதுச்சேரி பல்கலை, 42 - 22 என்ற கணக்கில் பருல் பல்கலையை வீழ்த்தி வென்றது.