/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'வாஸ்போ' பால் பேட்மின்டன் எத்திராஜ், எஸ்.ஆர்.எம்., வெற்றி
/
'வாஸ்போ' பால் பேட்மின்டன் எத்திராஜ், எஸ்.ஆர்.எம்., வெற்றி
'வாஸ்போ' பால் பேட்மின்டன் எத்திராஜ், எஸ்.ஆர்.எம்., வெற்றி
'வாஸ்போ' பால் பேட்மின்டன் எத்திராஜ், எஸ்.ஆர்.எம்., வெற்றி
ADDED : பிப் 14, 2024 11:36 PM

சென்னை:மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான, 'வாஸ்போ பால் பேட்மின்டன்' போட்டியில், எத்திராஜ் மற்றும் எஸ்.ஆர்.எம்., அணிகள் வெற்றி பெற்றன.
எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி சார்பில், 'வாஸ்போ' என்ற தலைப்பில், மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் அரும்பாக்கத்தில் நடக்கின்றன.
இவற்றில், பேட்மின்டனில் 23, பால் பேட்மின்டனில் 13, கூடைப்பந்தில் 12, சதுரங்கத்தில் 25, டேபிள் டென்னிசில் 12 மற்றும் வாலிபாலில் 15 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடந்த பால் பேட்மின்டன் போட்டியில், முதல் ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்., - ஜெபாஸ் அணிகள் மோதின. அதில், 35 - 24, 35 - 27 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் எத்திராஜ் அணி, 35 - 25, 35 - 28 என்ற கணக்கில் ஜெபாஸ் அணியை தோற்கடித்தது.
மற்றொரு போட்டியில் செயின்ட் ஜோசப் அணி, 35 - 5, 35 - 11 என்ற கணக்கில், அன்னை வயலெட் அணியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.