/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீணான ஆழ்துளை குடிநீர் கை பம்புகள்அரசு பணம் ரூ.17 கோடி 'அம்போ
/
வீணான ஆழ்துளை குடிநீர் கை பம்புகள்அரசு பணம் ரூ.17 கோடி 'அம்போ
வீணான ஆழ்துளை குடிநீர் கை பம்புகள்அரசு பணம் ரூ.17 கோடி 'அம்போ
வீணான ஆழ்துளை குடிநீர் கை பம்புகள்அரசு பணம் ரூ.17 கோடி 'அம்போ
ADDED : ஆக 24, 2024 12:58 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 16.80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 3,000 ஆழ்துளை குடிநீர் கைபம்புகள் பயன்பாடில்லாமல் புதருக்குள் மாயமாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க, 4,528 ஆழ்துளை கிணறு, 3,772 மின்விசை மோட்டார், 2,084 சிறு மின்விசை மோட்டார், மற்றும் 4,200 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. மின்சாரம் இல்லாத நேரத்தில், பகுதிவாசிகள் குடிநீர் பெற, மாவட்டம் முழுதும் 3,200 ஆழ்துளை குடிநீர் கை பம்புகள் கடந்த 20 ஆண்டுக்கு முன் தலா 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 17.92 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், பெரும்பாலான ஆழ்துளை குடிநீர் கை பம்புகளில் தண்ணீர் வராமல், காற்று தான் வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாததால், அதனை சுற்றிலும் புதர் மண்டி, வீணாகி விட்டது.
இதுகுறித்து புதுமாவிலங்கை பகுதிவாசிகள் கூறியதாவது:
குடிநீர் கை பம்புகள் அனைத்தும், குறிப்பிட்ட ஆழத்தில் அமைக்காததால் மூன்று மாதத்திலேயே தண்ணீர் வற்றி விட்டது. அரசு நிதி ஒதுக்கியும் ஒன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை. ஒப்பந்ததாரர்கள், 'போர்வெல்' அமைக்கும் போது தண்ணீர் வந்ததும் முடித்து விடுகின்றனர்.
ஆனால், கணக்கை மட்டும் அதிகமாக காண்பிக்கின்றனர். இதனால், கை பம்பு அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே தண்ணீர் வற்றி பொதுமக்களுக்கு பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளதோடு அரசு பணமும் வீணாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2006-11ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் குடிநீர் பராமரிப்புத்துறை என்று இயங்கி வந்த துறை மாயமானதோடு, 'பிட்டர்' என்ற பணியிடமும் மாயமானது. இதனால் ஆழ்துளை கிணறு குடிநீர் கைபம்பு பழுது ஏற்பட்டால் அதனை சீரமைக்க முடியாமல் வீணானது. மேலும், 'டான்சி' நிறுவனம் உதிரிபாகம் தயாரிப்பு பணியை நிறுத்தியதால், சேதமடைந்த கை பம்புகளை சீரமைக்க முடியவில்லை. அரசு, மீண்டும் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் பணியாட்களை நியமித்தால் தான் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

