/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர்சூழ்ந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றுவது எப்போது?
/
புதர்சூழ்ந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றுவது எப்போது?
புதர்சூழ்ந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றுவது எப்போது?
புதர்சூழ்ந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றுவது எப்போது?
ADDED : அக் 11, 2024 02:18 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சியில், பவானி நகர், பராசக்தி நகரில் உள்ள குழந்தைகள் கல்வி பயில பி.டி.ஓ., அலுவலக வாயிலில், எட்டு ஆண்டுகளுக்கு முன், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.
அதன்பின், புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், 'கட்டடம் உறுதி தன்மையுடன் இல்லை' என, சான்று அளித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அதன் அருகே மாற்று கட்டடம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.
ஆனால், பழைய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் விடப்பட்டதுடன், தற்போது புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், இந்த கட்டடம் பாம்பு, விஷப் பூச்சி மற்றும் நாய்களின் இருப்பிடமாக மாறியுள்ளதால், பி.டி.ஓ., அலுவலகம் வருவோர் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, பயன்பாடின்றி உள்ள கட்டடத்தை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.