/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் தொட்டிக்கு கண்துடைப்பு வேலி ஏணியை விட்டு அமைத்ததால் அதிருப்தி அலட்சிய அதிகாரிகள் யார்?
/
குடிநீர் தொட்டிக்கு கண்துடைப்பு வேலி ஏணியை விட்டு அமைத்ததால் அதிருப்தி அலட்சிய அதிகாரிகள் யார்?
குடிநீர் தொட்டிக்கு கண்துடைப்பு வேலி ஏணியை விட்டு அமைத்ததால் அதிருப்தி அலட்சிய அதிகாரிகள் யார்?
குடிநீர் தொட்டிக்கு கண்துடைப்பு வேலி ஏணியை விட்டு அமைத்ததால் அதிருப்தி அலட்சிய அதிகாரிகள் யார்?
ADDED : ஜூலை 05, 2025 11:30 PM

திருவாலங்காடு:மேல்நிலை குடிநீர் தொட்டி மீது தனிநபர்கள் ஏறுவதை தடுக்க வேலி அமைக்கப்பட்டது. ஆனால், ஏணியை விட்டுட்டு வேலி அமைத்துள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், இப்பணியை ஆய்வு செய்த அலட்சிய அதிகாரிகள் மீது, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், தலித் மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில், கடந்த 2022 டிச., 26ம் தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாநிலம் முழுதும் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது வெளிநபர்கள் ஏறுவதை தடுக்க வேலி அமைத்து பாதுகாக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முழுதும், கடந்த டிசம்பர் மாதம் முதல் குடிநீர் தொட்டி மீது ஏற முடியாதபடி வேலி அமைக்கப்பட்டது.
திருவாலங்காடு ஒன்றியம், ஜாகீர்மங்கலம் ஊராட்சி ராஜபத்மாபுரம் கிராமத்தில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கு, 15வது நிதிக்குழு மானியத்தில், 39,500 ரூபாய் மதிப்பில் வேலி அமைக்கப்பட்டது.
ஆனால், குடிநீர் தொட்டியை சுற்றி மட்டும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஏணி அப்படியே விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
வெளிநபர்கள் குடிநீர் தொட்டி மீது ஏறுவதை தடுக்கவே வேலி அமைக்கப்படும். ஆனால், எங்கள் கிராமத்தில் ஏணியை விட்டு வேலி அமைத்தது அதிசயமாக உள்ளது.
இப்பணியை அலட்சியமாக கையாண்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் யார்? பணியை நேரில் ஆய்வு செய்யாதது ஏன்? இது குறித்து உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி துறை மூலமாக நடைபெறும் அனைத்து பணிகளும் கண்துடைப்பிற்காக மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.