/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கணவர் மீது தாக்குதல் மனைவி தற்கொலை
/
கணவர் மீது தாக்குதல் மனைவி தற்கொலை
ADDED : ஜூலை 17, 2025 02:04 AM
பழவேற்காடு:எதிர்வீட்டு தம்பதி கணவரை தாக்கியதால், மன உளைச்சலுக்கு ஆளான மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
பழவேற்காடு, நாட்டுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் மனைவி கார்த்திகா, 30. இவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு, எதிர்வீட்டு பெண்ணின் கணவர் மது போதையில் கார்த்திகாவின் குடும்பத்தினரை அவதுாறாக பேசினார்.
இதை ஜெயசீலன், கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
எதிர்வீட்டு பெண் கணவருடன் சேர்ந்து, ஜெயசீலனை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த ஜெயசீலன் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கார்த்திகா, அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ள 'வாட்ஸாப்' குரூப்பில், தன் கணவரை எதிர்வீட்டார் தாக்கியதில், மனஉளைச்சலில் இருப்பதாக தெரிவித்தார்.
அதையடுத்து உறவினர்கள் கார்த்திகாவை பார்க்க சென்றனர். அங்கு கார்த்திகா மின்விசிறியில் துாக்கில் தொங்கியவாறு கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.