/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கவரைப்பேட்டை பஜார் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பரா?
/
கவரைப்பேட்டை பஜார் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பரா?
கவரைப்பேட்டை பஜார் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பரா?
கவரைப்பேட்டை பஜார் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பரா?
ADDED : அக் 19, 2025 07:26 PM
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை பஜார் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழை வெள்ளம் சூழ்ந்து, அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை பஜார் பகுதி அமைந்துள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
பஜார் பகுதி அமைந்துள்ள சாலையோரம், மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இச்சாலையில் தாழ்வாக உள்ள, 100 மீட்டர் துாரத்திற்கு, சிறு மழை பெய்தாலும் குளம் போல் மழைநீர் தேங்குகிறது.
அச்சமயங்களில், பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.