/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அந்தேரியம்மன் குளக்கரையில் காரிய மேடை அமைக்கப்படுமா?
/
அந்தேரியம்மன் குளக்கரையில் காரிய மேடை அமைக்கப்படுமா?
அந்தேரியம்மன் குளக்கரையில் காரிய மேடை அமைக்கப்படுமா?
அந்தேரியம்மன் குளக்கரையில் காரிய மேடை அமைக்கப்படுமா?
ADDED : ஜன 30, 2025 10:52 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள், அருகே உள்ள அந்தேரியம்மன் குளக்கரையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக, இறப்புக்கு பின்னான காரிய நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், குளக்கரையில் காரிய மேடை மற்றும் கட்டடம் அமைக்காததால், மழை மற்றும் வெயிலில் ஒதுங்கக் கூட இடமில்லை. மேலும், குளிப்பதற்கும் போதிய தண்ணீர் வசதியின்றி, அப்பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுதவிர, கோடை காலத்தில் குளம் வறண்டு கிடப்பதால், காரியம் செய்ய வரும் அகூர் பகுதிவாசிகள், தண்ணீர் வசதியின்றி சிரமப்படுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம், மேற்கண்ட குளக்கரையில் காரிய மேடை, கட்டடம் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, கிராம சபை கூட்டங்களில் பல முறை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்தேரியம்மன் குளம் பகுதியில் காரிய மேடை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.