/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூனிப்பாளையம் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?
/
கூனிப்பாளையம் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?
கூனிப்பாளையம் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?
கூனிப்பாளையம் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?
ADDED : ஜூன் 21, 2025 06:56 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூண்டி ஒன்றியம், கூனிப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இங்கு, மொத்தம் ஏழு வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இது, மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால், ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்பு மாணவர்கள் அமர வைத்து, கல்வி கற்பிக்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது என முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பொதுக்கூட்டங்களில் பேசி வரும் நிலையில், கூனிப்பாளையம் கிராம அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.