/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையம் சின்னம்மாபேட்டையில் அமையுமா?
/
இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையம் சின்னம்மாபேட்டையில் அமையுமா?
இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையம் சின்னம்மாபேட்டையில் அமையுமா?
இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையம் சின்னம்மாபேட்டையில் அமையுமா?
ADDED : மார் 16, 2025 09:31 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு சன்னிதி தெருவில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சின்னம்மாபேட்டை, மணவூர், அரிசந்திராபுரம், வீரராகவபுரம், வியாசபுரம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் என, தினமும் ஆயிரக்கணக்கானோர் வங்கிக்கு பணப் பரிவர்த்தனை செய்ய வந்து செல்கின்றனர். அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உள்ள இந்த வங்கிக்கு, வங்கி அருகே மட்டும் ஏ.டி.எம்., மையம் உள்ளது.
சின்னம்மாபேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமவாசிகள், இந்த வங்கியில் வாடிக்கையாளராக உள்ளனர். அவர்கள் பணம் எடுக்க மற்றும் செலுத்த 5 - 10 கி.மீ., தூரத்தில் உள்ள திருவாலங்காடுக்கு வர வேண்டியுள்ளது. இதனால், தங்களுக்கு கூடுதல் செலவு மற்றும் அலைச்சல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், திருவாலங்காடில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தில் பல நேரங்களில் பணம் இருப்பதில்லை. சில நேரம் பழுது காரணமாக வேலை செய்யவதில்லை. இதனால், 20 கி.மீ.,யில் உள்ள திருவள்ளூர் அல்லது அரக்கோணம் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, வங்கி உயரதிகாரிகள் ஆய்வு செய்து, சின்னம்மாபேட்டையில் ஏ.டி.எம்., மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.