/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடி அகற்றப்படுமா?
/
மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடி அகற்றப்படுமா?
மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடி அகற்றப்படுமா?
மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடி அகற்றப்படுமா?
ADDED : ஜன 07, 2025 07:19 AM

திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது புளியங்குண்டா கிராமம்.
இங்கு, கனகம்மாசத்திரம் ---- திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இரண்டு மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், மழை மற்றும் பேரிடர் காலங்களில் மின்கம்பிகளில் பழுது ஏற்பட்டால், மின்கம்பங்களில் ஊழியர்கள் ஏறி மின்சாரத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, மின்வாரிய அதிகாரிகள், மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.வி.சேசைய்யா,
புளியங்குண்டா.
சாமிரெட்டிகண்டிகையில்
ஏ.டி.எம்., மையம் வேண்டும்
கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டிய சாமிரெட்டிகண்டிகை, பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். அங்கு, முனுசாமி நகர், பெரியார் நகர், பூபால் நகர், ஸ்ரீராம் கார்டன், சபரி கார்டன் என, 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
மேலும், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அப்பகுதியினர், அவசர பண தேவைக்கு, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி நகர் பகுதி ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்ல வேண்டும்.
இரவு நேரத்தில் பெண்களும், முதியவர்களும் பணம் எடுக்க வெகு தொலைவு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பகுதிவாசிகளின் நலன் கருதி, சாமிரெட்டிகண்டிகை பகுதியில் வங்கி ஏ.டி.எம்., மையம் திறக்கப்பட வேண்டும்.
- எஸ்.சதானந்தன்,
கும்மிடிப்பூண்டி.
சேதமடைந்த
ரேஷன் கடை
பூண்டி ஒன்றியம், குண்ணவலம் கிராமத்தில் ரேஷன் கடை அரசு பள்ளி அருகே அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் தற்போது, சேதமடைந்து உள்ளது. இதனால், உணவு பொருட்கள் மழையில் நனையும் அபாயம் உள்ளதுடன், படிகள் உடைந்துள்ளதால் நுகர்வோர் விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, சேதமடைந்துள்ள ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.விஜயகுமார்,
குண்ணவலம்.
மேம்பாலத்தில்
மின்விளக்கு தேவை
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. ஆனால், மின்விளக்குகள் அமைக்கவில்லை.
இதனால், இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்குகள் வாயிலாக செல்ல வேண்டி உள்ளது. எனவே, மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.ராமகிருஷ்ணன்,
ஊத்துக்கோட்டை.