/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டு கோர்ட் வளாகத்தில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்படுமா?
/
பள்ளிப்பட்டு கோர்ட் வளாகத்தில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்படுமா?
பள்ளிப்பட்டு கோர்ட் வளாகத்தில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்படுமா?
பள்ளிப்பட்டு கோர்ட் வளாகத்தில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்படுமா?
ADDED : ஜன 23, 2024 05:21 AM
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில், சோளிங்கர் சாலையில் குறுகலான கட்டடத்தில் செயல்பட்டு வரும் கோர்ட்டுக்கு, பொதட்டூர்பேட்டை கூட்டு சாலையில், புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பகுதியில், தீயணைப்பு நிலையம், வனத்துறை அலுவலகம், உணவு பாதுகாப்பு துறை கிடங்கு உள்ளிட்டவை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, சோளிங்கர் செல்லும் மூன்று சாலைகளின் கூட்டு சாலையில், பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, பயணியர் முச்சந்தியில் காத்திருந்து பயணம் மேற்கொள்கின்றனர். கோர்ட் வளாகம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், இந்த நிறுத்தம், அதிக எண்ணிக்கையிலான பயணியர்களால் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்படும்.
அதற்கு ஏற்ப, விரிவான பயணியர் நிழற்குடை கட்டப்பட வேண்டியது அவசியம். அந்த நிழற்குடையில், குடிநீர், இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.