/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆண்டார்குப்பத்தில் தங்கும் விடுதி 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படுமா?
/
ஆண்டார்குப்பத்தில் தங்கும் விடுதி 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படுமா?
ஆண்டார்குப்பத்தில் தங்கும் விடுதி 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படுமா?
ஆண்டார்குப்பத்தில் தங்கும் விடுதி 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படுமா?
ADDED : ஜூலை 02, 2025 09:14 PM
பொன்னேரி,:ஆண்டார்குப்பம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தங்கும் விடுதிகள் மற்றும் 'பார்க்கிங்' வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
மிகவும் பழமையான இந்த கோவிலுக்கு, ஆடி மற்றும் சித்திரை மாதங்களில் வரும் கிருத்திகை நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும், பரணி நட்சித்திர நாளன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள், இரவு தங்கி, மறுநாள் கிருத்திகையின்போது முருகனை தரிசித்தால் பிரச்னைகள் நீங்குவதாக கூறப்படுகிறது. அந்நாளில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.
அதேபோல், ஒவ்வொரு சுபமுகூர்த்த நாட்களில், 10 - 15 திருமணங்கள் நடக்கின்றன. திருமண வீட்டார்கள் முகூர்த்த நாட்களில், ஒருநாள் முன்னதாக கோவிலுக்கு வந்து தங்க திட்டமிடுகின்றனர்.
ஆனால், இப்பகுதியில் விடுதிகள் இல்லாததால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக இரவு தங்கும் பக்தர்களும், தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர்.
மேலும், வாகனங்களை நிறுத்துவதற்கு 'பார்க்கிங்' வசதியும் இல்லை. அவை குடியிருப்புகளின் அருகிலும், சாலையோரங்களிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாவதுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.
அவற்றில் தங்கும் விடுதிகள் மற்றும் 'பார்க்கிங்' வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.