/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்த பெண் சிக்கினார்
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்த பெண் சிக்கினார்
ஏலச்சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்த பெண் சிக்கினார்
ஏலச்சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்த பெண் சிக்கினார்
ADDED : மே 03, 2025 02:22 AM
சோழவரம்:சோழவரம் அருகே உள்ள செம்புலிவரத்தைச் சேர்ந்தவர் பாபு, 40. அதே பகுதியைச் சேர்ந்தவர் பவானி, 35. இவர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இவரிடம், பாபு ஏலச்சீட்டு போட்டு பணம் செலுத்தி வந்தார்.
கடந்தாண்டு ஜனவரி - அக்டோபர் மாதம் வரை மூன்று சீட்டுகளில், 1,66,200 ரூபாய் செலுத்தி இருந்தார். இவரை போல், 50க்கும் மேற்பட்டோர் பவானியிடம் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு, என, 78 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமலும், தீபாவளி சீட்டிற்கு நகை, பொருட்களை கொடுக்காமலும் பவானி ஏமாற்றி வந்தார். அதன்பின் தலைமறைவானார்.
இதுகுறித்து பாபு, ஆவடி கமிஷனர் சங்கரிடம் புகார் அளித்தார். அதன்படி, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னை, திருவேற்காடு வேலப்பன்சாவடியில் பதுங்கியிருந்த பவானியை நேற்று போலீசார் கைது செய்தனர்.