/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ கவிழ்ந்து விபத்து பெண் பலி; மூவர் படுகாயம்
/
ஆட்டோ கவிழ்ந்து விபத்து பெண் பலி; மூவர் படுகாயம்
ADDED : பிப் 06, 2025 10:47 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நூருல்லா, 50; இவர், நேற்று மதியம், மனைவி பர்வீன், 42, என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால், மகள் ருக் ஷான 20 மற்றும் பேரன் ஹர்ஷத், 4, உடன், ஆட்டோவில் திருவாலங்காடு மருத்துவமனைக்கு சென்றார்.
சின்னம்மாபேட்டை --- திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையில், சக்கரமநல்லூர் அருகே சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், பர்வீன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவர் சிறியளவு காயத்துடன் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருவாலங்காடு போலீசார், பர்வீன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

