/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்விசிறி விழுந்து பெண் படுகாயம்
/
மின்விசிறி விழுந்து பெண் படுகாயம்
ADDED : ஜூன் 23, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி அடுத்த மேல்திருத்தணியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் மனைவி சுபாஷினி, 30. இவர், நேற்று காலை வயிற்று வலி காரணமாக, திருத்தணி அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாக பெண்கள் பிரிவு வார்டில் சேர்க்கப்பட்டார்.
அன்று மாலை கட்டிலில் படுத்திருந்த சுபாஷினி மீது, மேலே இருந்த மின்விசிறி திடீரென உடைந்து விழுந்தது. இதில், அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், அவரது நெற்றியில் இரண்டு தையல் போடப்பட்டது. திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.