/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடிந்து விழும் நிலையில் மகளிர் குழு கட்டடம்
/
இடிந்து விழும் நிலையில் மகளிர் குழு கட்டடம்
ADDED : ஏப் 21, 2025 11:44 PM

பொன்னேரி, மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கம் காலனியில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பாழடைந்துள்ளது.
கட்டடத்தின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுக்கள் கொட்டி வருகின்றன. கூரை உள்வாங்கி விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதன் அருகில் அங்கன்வாடி மையமும் இருப்பதால், அங்கு வந்து செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
கட்டடம் பாழடைந்ததால், யாரும் பயன்படுத்துவதில்லை. மழைக்காலங்களில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதங்கள் நேரிடும் முன், கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும். இப்பகுதியில் புதியதாக மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதற்கான இடம் தேடி வரும் நிலையில், இக்கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.