/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி துவக்கம்
/
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி துவக்கம்
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி துவக்கம்
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி துவக்கம்
ADDED : நவ 15, 2024 08:40 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
திருவள்ளுர் ஜே.என்.சாலையில் உள்ள, பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை கலெக்டர் பிரபுசங்கர் துவக்கி வைத்து, மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை பூமாலை வணிக வளாகத்தில் துவங்கி வரும் 24 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்களை வாங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஆதரவு அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி, உதவி திட்ட அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.