/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொப்பூரில் 'பார்க்கிங்' ஏரியாவான மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம்
/
கொப்பூரில் 'பார்க்கிங்' ஏரியாவான மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம்
கொப்பூரில் 'பார்க்கிங்' ஏரியாவான மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம்
கொப்பூரில் 'பார்க்கிங்' ஏரியாவான மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம்
ADDED : ஜன 03, 2025 02:12 AM

கொப்பூர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொப்பூர் ஊராட்சி. இப்பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டடது.
இந்த கட்டடம் முறையான பராமரிப்பில்லாததால் பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது. இதனால் மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் வீணாகி வருவதோடு வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாறி வருகிறது.
அருகிலேயே ஊராட்சி அலுவலகம் இருந்தும் மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கொப்பூர் ஊராட்சியில் ஆய்வு செய்து மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.