/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை விபத்தில் பலியான தொழிலாளி
/
தொழிற்சாலை விபத்தில் பலியான தொழிலாளி
ADDED : டிச 17, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்கரன் சிங், 42. கும்மிடிப்பூண்டி அடுத்த, பாப்பான்குப்பம் கிராமத்தில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள ‛ஜெயின் ரிசோர்ஸ் ரிசைக்கிளிங்' என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
இம்மாதம், 11ம் தேதி, மரக்கரி ஏற்றி வந்த லாரி அருகே அவர் சென்றபோது, எதிர்பாராத விதமாக, 50 கிலோ எடை கொண்ட மரக்கரி மூட்டை ஒன்று அவர் மீது விழுந்தது.
இதில், படுகாயம் அடைந்த அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.