/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'இ- -- சேவை' மையத்தில் கூடுதல் கட்டணம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்

ADDED : ஏப் 10, 2025 08:27 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட 'இ-சேவை' மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், புகார் அளிக்கலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு 'இ-- சேவை' மையங்களில் பணிபுரிவோர், பட்டா மற்றும் இதர சான்றுகள் கோரி விண்ணப்பம் செய்ய வருவோரிடம், அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக 200 ரூபாய் வரை வாங்குவதாக புகார் வந்துள்ளது. மேலும் பட்டா மற்றும் இதர சான்றுகள் பெற்றுத்தருவதாக கூறி, பணம் வசூலிப்பதாகவும் தெரிய வருகிறது.
இது போன்ற புகார் வந்தால், சம்மந்தப்பட்ட இ-- சேவை மையங்களின் பொறுப்பாளர் மற்றும் பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர்களும் தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் 'இ-- சேவை' மையங்களை கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் குறைபாடு இருந்தால், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் 044- 27662455 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.