/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ADDED : ஆக 20, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த குமரஞ்சேரியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 28. இவர், கடந்த மாதம் திருவாலங்காடு அடுத்த குப்பம்கண்டிகை கிராமத்தில், பணத்தகராறில் ஒருவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினார்.
மேலும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் மப்பேடு, கடம்பத்துார் காவல் நிலையங்களில் உள்ளதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின்படி, கலெக்டர் பிரதாப் நேற்று கோபாலகிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.