ADDED : செப் 14, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சி பரேஸ்புரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 23. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன், கூளூர் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றார்.
பின், சந்தோஷ் 'ஹோண்டா ஷைன்' பைக்கில், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கூளூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திருத்தணி நோக்கி வந்த லாரி சந்தோஷ் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சந்தோஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.