ADDED : ஜன 02, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே பூவலை கிராமத்தில் வசித்தவர் இதயத்துல்லா, 30, ஆந்திர மாநிலம், தடா பகுதியில் வாகனங்களுக்கான டயர் பஞ்சர் கடை நடத்தி வந்தார். நேற்று காலை பஜாஜ் பல்சர் பைக்கில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் சந்திப்பில், சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் இதயத்துல்லா உயிரிழந்தார்.
ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

