/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து மோதி பைக் தீக்கிரை வாலிபர் பலி; பயணியர் பீதி
/
பேருந்து மோதி பைக் தீக்கிரை வாலிபர் பலி; பயணியர் பீதி
பேருந்து மோதி பைக் தீக்கிரை வாலிபர் பலி; பயணியர் பீதி
பேருந்து மோதி பைக் தீக்கிரை வாலிபர் பலி; பயணியர் பீதி
ADDED : அக் 27, 2025 01:15 AM

திருவாலங்காடு: தி ருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன், 25. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு, இரவு 'ஹூரோ ஹோண்டா பேஷன் ப்ரோ' பைக்கில், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, நல்லாட்டூருக்கு சென்று கொண்டிருந்தார்.
கனகம்மாசத்திரம் அடுத்த ரகுநாதபுரம் கிராமம் அருகே சென்றபோது, சென்னை - திருப்பதி நோக்கி சென்ற தடம் எண்: 201 என்ற அரசு பேருந்து, முன்னே சென்ற கீர்த்திவாசன் பைக் மீது மோதியது. இதில், பேருந்தின் அடியில் பைக் சிக்கிக் கொண்டு இழுத்துச் சென்றதால், பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எறிந்தது.
இதனால், அதிர்ச்சடைந்த ஓட்டுநர் மற்றும் பயணியர், விரைந்து சென்று பேருந்துக்கு அடியில் எரிந்து கொண்டிருந் த பைக்கை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். படுகாயமடைந்த கீர்த்திவாசனை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், கீர்த்திவாசன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

