/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் 'டைவ்' அடிக்கும் இளசுகள்
/
ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் 'டைவ்' அடிக்கும் இளசுகள்
ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் 'டைவ்' அடிக்கும் இளசுகள்
ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் 'டைவ்' அடிக்கும் இளசுகள்
ADDED : நவ 18, 2024 04:04 AM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் நிரம்பி வழியும் அணைக்கட்டு பகுதியில், ஆபத்தாக குளிப்பவர்களும், மீன் பிடிப்பவர்களும் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்ல நேரிடும். சில சமயம் உயிரிழப்புகளும் ஏற்படும்.
தற்போது அணைக்கட்டு நிரம்பி வழியும் சூழலில், ஏராளமான இளசுகள், அணைக்கட்டில் தண்ணீர் பாயும் இடத்தில், ஆபத்தாக குளித்தும், மீன் பிடித்தும் வருகின்றனர். ஒரு சில இளசுகள், அணைக்கட்டில் இருந்து தண்ணீரில் ‛டைவ்' அடித்து ஆபத்தாக குளித்து வருகின்றனர்.
நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஓடும் அணைக்கட்டு பகுதியில் ஆபத்தை உணராமல், ஆட்டம் போடும் இளசுகளை, கவரைப்பேட்டை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், அணைக்கட்டு பகுதியை போலீசார் கண்காணித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
****