/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : நவ 09, 2025 02:27 AM
திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மரப்பாகரத்தை சேர்ந்தவர் கண்ணாயிரமூர்த்தி, 25. இவர், பருத்திச்சேரியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதை, சிறுமியின் தாய் கண்டித்துள்ளார். அவரை வாலிபர் மிரட்டியுள்ளார்.
நவ., 5ல், கல்லுாரிக்கு சென்ற சிறுமியிடம், திருமண ஆசை வார்த்தை கூறி, தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு, சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின், 7ம் தேதி காலை சிறுமியை, அவரது வீட்டின் அருகில் விட்டு சென்றுள்ளார்.
திருத்துறைப்பூண்டி மகளிர் போலீசார், கண்ணாயிரமூர்த்தி மீது நேற்று போக்சோவில் வழக்கு பதிந்தனர்.

