15 வயது இளம்பெண்ணை சீரழித்த மூன்று பேர் கைது; ஒருவருக்கு வலை
15 வயது இளம்பெண்ணை சீரழித்த மூன்று பேர் கைது; ஒருவருக்கு வலை
ADDED : ஆக 01, 2026 01:13 AM

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில், 15 வயது இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய, மூன்று பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூரை சேர்ந்த, 15 வயது இளம்பெண், பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். தாய், தந்தை பிரிந்துவிட்டதால், எடையூர் அருகே, தாத்தா, பாட்டி வீட்டில் வசித்தார்.
இந்நிலையில், பேத்தியை காணவில்லை என, எடையூர் போலீசில், கடந்த, 19ம் தேதி, பெண்ணின் தாத்தா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பெண்ணை தேடினர்.
பின், அப்பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, போலீசார் அவரை மீட்டனர்.
விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. பாண்டி பகுதியை சேர்ந்த சங்கரய்யா, 24 என்பவருடன், இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர், சில மாதங்களுக்கு முன், திருப்பூரில் வேலைக்கு சென்றுள்ளார். உடன், பெண்ணை அழைத்து சென்று உள்ளார்.
இருவரும், அங்கு, 10 நாட்கள் தங்கியிருந்த போது, பாலியல் ரீதியாக சங்கரய்யா அவரிடம் அத்துமீறியுள்ளார். பின், இருவரும் ஊர் திரும்பினர்.
திருப்பூர் சென்றுவந்த பின், பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது, அங்கு, வார்டு பாய் முத்துக்குமரன், 35, பழக்கம் ஏற்பட்டு, அவரும், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், குரும்பல் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ், 24, என்பருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரும், சீரழித்துள்ளார். பின் ஆம்புலன்ஸ் டிரைவர், விஜய் பழக்கம் ஏற்படவே, அவரும் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். நான்கு பேரும், இளம்பெண்ணை, பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி மகளிர் போலீசார், சங்கரய்யா, முத்துக்குமரன், விமல்ராஜ் ஆகிய மூன்று பேரை போக்சோவில் கைது செய்தனர்; விஜயை தேடி வருகின்றனர்.
