/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
173 பேர் ஓட்டுகள் நீக்கம் அதிகாரிகளிடம் மக்கள் புகார்
/
173 பேர் ஓட்டுகள் நீக்கம் அதிகாரிகளிடம் மக்கள் புகார்
173 பேர் ஓட்டுகள் நீக்கம் அதிகாரிகளிடம் மக்கள் புகார்
173 பேர் ஓட்டுகள் நீக்கம் அதிகாரிகளிடம் மக்கள் புகார்
ADDED : ஏப் 20, 2024 02:07 AM

திருச்செந்துார்:துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உள்ள தளவாய்புரம் பொதுநல ஐக்கிய சங்க தொடக்க பள்ளியில் ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அங்கு, ஓட்டுப் போட சென்ற சிலரின் பெயர், பட்டியலில் இல்லை என அதிகாரிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தளவாய்புரம், கிருஷ்ணா நகர், வன்னியங்காடு, புதுார் ஆகிய பகுதி மக்களுக்கு அந்த ஓட்டுச் சாவடி ஒதுக்கப்பட்டிருந்தது. 1,027 ஓட்டுகள் உள்ள அந்த சாவடியில், 173 ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து தாசில்தார் பாலா மற்றும் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இவர்களின் பெயர்கள், கடந்த நவம்பர் மாதத்தில் நீக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தான் முறையிட்டு பெயரை சேர்த்து இருக்க வேண்டும் என பதில் அளித்தார்.
ஓட்டுகள் நீக்கப்பட்ட தகவல் பரவியதும், அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணி அங்கு சென்றார். பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் விபரங்களை கேட்டறிந்தார்.

